டாஸ்மாக் மதுபாட்டில் விலை அக்., முதல் ரூ.10 அதிகரிக்க வாய்ப்பு..!

 
tasmac

டாஸ்மாக் மதுபான பாட்டில்களின் விலை அக்டோபர் மாதம் முதல் ரூ.10 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலி மதுபாட்டில்களை மறுசுழற்சி செய்தல், அகற்றுதல் மற்றும் போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்துக்கான தீர்வை உயர்த்தும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், அடுத்த மாதம், முதல் வாரத்தில் இருந்து, மது வகைகள் பாட்டிலுக்கு, 10 ரூபாய் உயர்த்தப்பட உள்ளன.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுக்கடைகளில், மது பாட்டில் விற்கப்படும் போது, அதிகபட்ச சில்லரை விலையுடன் சேர்த்து, 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை திரும்ப ஒப்படைத்ததும், அந்த, 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும். புதிய தீர்வையால், 20 ரூபாய் வரை, மது பாட்டில் விலையை உயர்த்தலாம். இருப்பினும், 10 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பின், மது பாட்டில் விலையுடன், கூடுதல் பணம் வசூலிக்க வாய்ப்பு ஏற்படாது. மதுராந்தகம், திருப்பூர் இடைத்தேர்தல் முடிந்ததும், இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.