புதிய சீருடை அணிய மாட்டோம் - டாஸ்மாக் ஊழியர்களுக்கு போர்க்கொடி..!

 
1

'டாஸ்மாக்' நிறுவனத்தின், சில்லரை மதுக்கடைகளில், 20,000க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு, புதிய சீருடை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு, வெளிர் நீல நிறத்தில் சட்டை மற்றும் அடர் நீல நிறத்தில் பேன்ட் வழங்கப்பட உள்ளது. அதே போல், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு, வெளிர் பழுப்பு நிற சட்டையும், அடர் சாம்பல் நிற பேன்ட்டும் வழங்கப்பட உள்ளது. நவ., 15 முதல் புதிய சீருடை அமலுக்கு வரும் என, கூறப்படுகிறது.


3 செட் சீருடைகளுக்காக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.6 ஆயிரம் வரவு வைக்கப்பட்டு விட்டதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சீருடைக்கான துணியைக் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாங்க அறிவுறுத்தப்பட் டுள்ளது.


ஆனால், இதுவரை சீருடைக்கான துணி எதுவும் வரவில்லை என்று கூறும் டாஸ் மாக் ஊழியர்கள், இந்த சீருடையை அணிய மாட்டோம் எனப்போர்க்கொடி தூக்கி யுள்ளனர். இந்தச் சீருடை சமூகத்தில் தங்களை ' மதுக்கடைக்காரர்களாக' தனித் துக் காட்டி அடையாளப்படுத்தும் என்றும், வசூல் பணத்தை வங்கியில் செலுத்த செல்லும்போது கொள்ளையர்கள் தங்களை எளிதில் அடையாளம் கண்டு வழிப்பறி செய்ய இது வசதியாகிவிடும் என்றும் அவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

எனினும், வருகிற 15-ந்தேதி முதல் சீருடையை கட்டாயம் அணிய வேண்டும் என்றும், தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வழங்கப்பட்ட தொகை திரும்பப் பெறப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.