டாஸ்மாக் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

 
Tasmac

நாளை தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், வேலைப்பளு திணிப்பை கைவிடுதல், ஓய்வு வயது 60 ஆக உயர்த்துதல் உள்ளிட்ட 53 அம்ச கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி அறிவிக்க வலியுறுத்தி வலியுறுத்தி நாளை (ஆகஸ்ட் 28, வெள்ளிக்கிழமை) முதல் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக AITUC, CITU, LPF, LLF, AICCTU, BMS, TUCC, TTPTS,  TGTEU, SC/SCT UNION, Supervisor Union உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்து இருந்தது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் அமைச்சருடன் தொழிற்சங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும், ஆகஸ்ட் 31ம் தேதி சட்டமன்றத்தில் நடைபெறும் துறை மானிய விவாதத்தில் இதுகுறித்து அறிவிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பது என்று வேலைநிறுத்த அறிவிக்கை அளித்த சங்கங்கள் முடிவெடுத்துள்ளன,