டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்..!

 
1

மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது தமிழக அரசு அறிவித்த 717 டாஸ்மாக் மதுக் கடைகளில் தற்பொழுது வரை 462 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது என்றும், எஞ்சியுள்ள கடைகள் வரும் வாரத்திற்குள் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில இடங்களில் மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் மாற்று வழிகளை மேற்கொள்கிறோம் எனக் கூறியிருந்தோம். மாற்று வழிமுறையை ஏற்படுத்த ஒரு மாத கால அவகாசம் வேண்டும். அதற்குள்ளாக சரி செய்வோம் என அறிக்கை வாயிலாகவும் தெரிவித்திருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் பணியாளர் முன்னேற்ற சங்கம், மாநில டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம், தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சங்கம், டாஸ்மார்க் தொழிலாளர் விடுதலை முன்னணி, தமிழக பாட்டாளி டாஸ்மாக் தொழிற்சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி., பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு டாஸ்மார்க் அரசு பணியாளர் நல சங்கம், மேற்பார்வையாளர்கள் சங்கம், அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் டாஸ்மாக் சங்கம் உள்ளிட்ட சங்கங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அவர்களிடம் சூழ்நிலைகளை விவரித்தோம். நிச்சயமாக அரசு மீது நம்பிக்கை வைத்திருப்பதாக அவர்கள் கூறினார். தொழிலாளர்கள் மீதும் அரசுக்கும் நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக ஒரு மாத காலத்திற்குள் இந்த பிரச்சினைகளை சரி செய்யப்படும் எனக் கூறியிருந்தோம். அந்த வேண்டுகோளை ஏற்று நிச்சயமாக அனைத்து தொழிலாளர்களையும் இன்று முதல் பணிக்கு திரும்ப செல்லுமாறு அறிவுறுத்துவோம் எனக் கூறியிருக்கிறார்கள்" என்றார்.

 717 கடைகளில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மாத ஊதியம் நிச்சயமாக சென்று விடும். மேலும் மூடப்பட்ட கடைகளில் பணி புரிந்தவர்களுக்கு அருகில் உள்ள அதிக அளவில் மதுபானம் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் பணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்" என்றும் தெரிவித்தார்.