மே.1-ல் ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
மே தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள், தனியார் மதுபானக் கூடங்கள் வரும் திங்கட்கிழமை இயங்காது என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-ஆம் ஆண்டு மே -01 (திங்கட்கிழமை) மே தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களும், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மற்றும் எப்.எல்4ஏ உரிமம் பெற்று இயங்கி வரும் மதுபான விற்பனைக் கூடங்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யும் பொருட்டு மே-01 (திங்கட்கிழமை) அன்று முழுமையாக மூடி வைத்திட ஆணையிடப்படுகிறது. மேற்கண்ட நாளில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


