#BREAKING ஏப்.21 முதல் 23ம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்படும்
சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி வரும் 21 முதல் 23ம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12(2)ன்படி உரிமம் பெற்று இயங்கி வரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் (IMFL) சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் FL-2 முதல் FL-11 வரை (FL-6 தவிர) உரிமம் பெற்ற உரிமதலங்கள் அனைத்தும் 21042026 (செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 04.05.2026 (திங்கட்கிழமை) ஆகிய 4 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.


