#BREAKING டாஸ்மாக் பார் டெண்டர் நீட்டிப்பு?

 
tasmac

டாஸ்மாக் பார் டெண்டர் கால அவகாசம் கடந்த 30-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதனை நீட்டிப்பது  தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் ஆலோசனை மேற்கொண்டார். 6 வாரங்கள் வரை டெண்டர் கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


பார்களை மூடினால் கடைகளையும் மூடுவோம் என உரிமையாளர்கள் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு கடைக்கு ரூ.15,000 அரசு வாடகையாக கொடுத்து வருகிறது. தமிழகத்தில் சில கடைகளுக்கு மாத வாடகை ரூ.50,000 வரை வசூலிக்கப்படுகிறது. கூடுதல் வாடகை தொகையை பார் உரிமையாளர்களே கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த வாடகை கொண்ட கடைகளுக்கான தொகையை அரசு முழுமையாக வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலான கடைகளில் மின்சார கட்டணத்தையும் பார் உரிமையாளர்கள் அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.