பீகார் தொழிலாளியை தாக்கிய டாஸ்மாக் பார் ஊழியர் கைது

 
murder

கோவையில் பீகார் தொழிலாளியை தாக்கிய டாஸ்மாக் பார் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Coimbatore people on warpath against move to open Tasmac liquor shops in  residential areas | Coimbatore News - Times of India

கோவை மாவட்டம், அன்னூர் அருகே காட்டம்பட்டியில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவர் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த திலீப் கேவட் (வயது 34). இவர் இன்று மாலை கணேசபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு சப்ளையராக பணிபுரிந்து வரும் சிவகங்கையை சேர்ந்த ஜேசுவின் மகன் பிரசன்ன குமார் (வயது 24) என்பவர் வெளியில் இருந்து தண்ணீர் பாட்டில் கொண்டு வந்தது ஏன்? என்று கேட்டு வாக்குவாதம் செய்து, திலீப் கேவட்டை அறைந்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து திலிப் கேவட்ட அளித்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து பிரசன்ன குமாரை கைது செய்து, அன்னூர் மாஜிஸ்திரேட் மோனிகா முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பீகார் தொழிலாளி அளித்த புகாரின் பேரில் உடனடியாக தாக்கியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.