மேனாமினுக்கித்தனம் காட்டுபவர்களை பார்த்து மயங்கி விட மாட்டார்கள் தமிழர்கள் - திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்..!

 
1

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.தேர்தல் நாள் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இவரது வருகையால் நட்சத்திர தொகுதியாக வில்லிவாக்கம் தொகுதி மாறி இருக்கிறது. இவருக்கு எதிராக திமுக சார்பில் கார்த்திக் மோகன் போட்டியிடுகிறார். இதுதவிர அதிமுக சார்பில் எஸ்.ஆர்.விஜயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் ரோஷினி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை துவங்கியுள்ளார் மநீம தலைவர் கமல்ஹாசன். தனது முதல் பரப்புரையிலே உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளார். 

அதன் பிறகு அவர் வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது கமல் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ உங்களுக்காக