"நீ போலீசாடா?" ரயில் டாய்லெட்டில் பதுங்கிய வட மாநிலத்தவரை அடித்து வெளுத்த தமிழர்கள்!

 
போலி

நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலில் தமிழக பயணிகளிடம் கைவரிசை காட்டிய வட மாநிலத்தை சேர்ந்த சந்திரமோகன்   என்பவரிடம் அவர் மொழியிலேயே பேசி தமிழர்கள் துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த நண்பர்களான லெலின்குமார் மற்றும் ஆஸ்பிலின் சிசன் ஆகிய இருவரும் செவ்வாய்கிழமை அன்று நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலில் மும்பைக்கு பயணம் செய்துள்ளனர் இருவரும் பயணம் செய்த கோச்சில் ஆண்கள் பெண்கள் என அனைத்து பயணிகளும் தமிழர்களாக இருந்துள்ளனர். நள்ளிரவு ரயில் கர்நாடகா மாநிலம் அனந்தபூர் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது தூக்கத்தில் இருந்த ஆஸ்பிலின் சிசன் என்பவரின் செல்போண் மாயமாகியிருந்தது இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சக பயணிகளிடம் விசாரித்த போது கோச்சில் போலீஸ் அதிகாரி ஒருவர் மட்டுமே வந்து சென்றதாக கூறியுள்ளனர்.

அடுத்ததாக பெண் ஒருவர் தனது தோள் பையில் இருந்த தங்கையின் செயின் மோதிரம் மற்றும் பர்ஸ் திருடி போயுள்ளதாக கூறியதை அடுத்து அதிர்ச்சியடைந்த தமிழர்கள் சந்தேகத்தில் கோச்சில் வந்து சென்ற போலீஸை தேடியுள்ளனர் அவரே கோச்சில் கழிப்பறை அருகே பதுங்கி கொண்ட நிலையில் சுற்றி வளைத்து பிடித்த தமிழர்கள் போலீஸ் வேஷத்தில் இருந்த அந்த வட மாநிலத்தை சேர்ந்தவரிடம்  அவர், மொழியிலேயே பேசி வறுத்தெடுத்ததோடு தங்கள் பாணியில் துவைத்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அந்த வட மாநிலத்தைச் சேர்ந்தவர் மும்பை பகுதியை சேர்ந்த சந்திரமோகன் என்பதும் நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு போலீஸ் போல் வேடமணிந்து கோச்சுகளில் புகுந்து தமிழர்களை குறிவைத்து திருடி கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.


இதனையடுத்து தமிழக பெண் பயணியை வரவழைத்து அவனிடம் இருந்து செயின் மோதிரம் பணத்தை மீட்டு அந்த பெண் பயணியிடம் ஒப்படைத்ததோடு ஏன் இரக்கம் காட்றீங்க அதுதான் தமிழன் என கூறி அந்த திருடன்  சந்திர மோகனை அடுத்த ரயில் நிலையமான ராய்சூரில் இறக்கி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர் அதையும் ஒன்றுமையுடன் தமிழர்கள் வீடியோ பதிவு செய்த நிலையில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.