7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்!!

 
karur rain

தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி , தூத்துக்குடி,மதுரை, சேலம் ,நாமக்கல் ,கோயமுத்தூர் ,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,   ஏனைய தென்மாவட்டங்கள்,  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் , வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

rain

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை ,தென்காசி ,திருச்சி ,சேலம், நாமக்கல் ,கோயமுத்தூர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் ,வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

rain

வருகிற 7ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8ம் தேதி தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,  கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் ,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

rain

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கரையோரம் நிலைகொள்ளும். இதன் காரணமாக மத்திய மேற்கு வங்க கடல் பகுதி , வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் புயல் காற்று இன்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும்,  இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  நாளை மத்திய மேற்கு வங்க கடல் பகுதி ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  இதனால் இப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.