தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
Nov 18, 2024, 07:30 IST1731895200000
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவு மற்றும் குமத்திய ரேகையை எட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்க அரபிக்கடல் பகுதிகள் வரை வரு வளிமண்டல மேடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.19-11-2024 முதல் 23-11-2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பதிைகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் வருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசாண/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.