சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வழகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ஆங்காங்கே அவ்வபோது கனமழை பெய்து வருகிறது. வருகிற நவம்பர் 01ம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் (நண்பகல் 1-3 மணி) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், 14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.