தமிழகத்தில் வருகிற 14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு
Updated: Nov 12, 2023, 14:30 IST1699779638734

தமிழகத்தில் வருகிற 14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வக காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.2. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
12.11.2023 மற்றும் 13.11.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில் லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14.11.2023 மற்றும் 15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாருர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16.11.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும்.17.11.203 மற்றும் 1811.2022: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.