சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!!

 
kalaivanar

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்  கடந்த 5 ஆம் தேதி  காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் மேகதாது அணை கட்ட கர்நாடகாவை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது , நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி  போன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதை தொடர்ந்து  சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் கூட்டத்தில் கொரோனா காரணமாக 2 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. 

stalin

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாளான நேற்று தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசையா , ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி குரூப் கேப்டன் வருண் சிங் மற்றும் 11 ராணுவ உயர் அலுவலர்கள் ,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் துரைமாணிக்கம்,   கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு ,   மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மன்ட்  டுட்டு ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலினின் பதிலுரை நிகழ்வு நடந்தது. தமிழக அரசின் மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் காலியிடங்களை டி.என்.பி.எஸ்.சி-யே இனி நிரப்பும், கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து, கூட்டுறவு சங்க அலுவலர்கள் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என பல முக்கிய மசோதாக்கள்  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன.

tn

இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.  ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடர் கொரோனா  காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே நடந்தது.  மொத்தம் மூன்று நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.