ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் - தமிழக அரசு

 
assembly

10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை

  • உளவுத்துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி IPS சைபர் கிரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • வேலூர் சரக டிஐஜி டாக்டர் தர்மராஜன் சென்னை நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பாகேர்லா செபாஸ் கல்யாண் உள்நாட்டு நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருநெல்வேலி சரக டிஐஜி பி.சரவணன் சிஐடி நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • திருவாரூர் எஸ்பி கராட் கருண் உத்தர்வாவ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
  • தென்காசி எஸ்பி மயில்வாகனன் சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தூத்துக்குடி எஸ்பி டாக்டர் மதன் பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
  • க்யூ பிராஞ்ச் சிஐடி எஸ்பி சண்முகம் போலீஸ் 2 சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மெட்ரொ மண்டல குற்றப்பிரிவு சிஐடி எஸ்பி மாதவன் போலீஸ் 2 பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சட்டம், ஒழுங்கு உதவி ஐஜி சிலம்பரசன் சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • நுண்ணறிவு பிரிவு டிஜிபி பால நாகதேவி சைபர் கிரைன் பிரிவு டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.