ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் - தமிழக அரசு
May 14, 2026, 15:05 IST1778751348262
10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

- உளவுத்துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி IPS சைபர் கிரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- வேலூர் சரக டிஐஜி டாக்டர் தர்மராஜன் சென்னை நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பாகேர்லா செபாஸ் கல்யாண் உள்நாட்டு நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- திருநெல்வேலி சரக டிஐஜி பி.சரவணன் சிஐடி நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திருவாரூர் எஸ்பி கராட் கருண் உத்தர்வாவ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- தென்காசி எஸ்பி மயில்வாகனன் சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தூத்துக்குடி எஸ்பி டாக்டர் மதன் பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
- க்யூ பிராஞ்ச் சிஐடி எஸ்பி சண்முகம் போலீஸ் 2 சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மெட்ரொ மண்டல குற்றப்பிரிவு சிஐடி எஸ்பி மாதவன் போலீஸ் 2 பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சட்டம், ஒழுங்கு உதவி ஐஜி சிலம்பரசன் சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- நுண்ணறிவு பிரிவு டிஜிபி பால நாகதேவி சைபர் கிரைன் பிரிவு டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

