தமிழக அரசின் மொத்த கடன் எவ்வளவு? - வெளியான அதிர்ச்சி தகவல்!

2025-26 நிதியாண்டில் மாநில அரசு ரூ.1.62 லட்சம் கோடிக்கு மொத்தக் கடன் பெறத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது தமிழகத்தின் மொத்த கடன்ம் மற்றும் நடப்பு ஆண்டில் வாங்க திட்டமிட்டுள்ள கடன் குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “2025-26 நிதியாண்டில் மாநில அரசு ரூ.1.62 லட்சம் கோடிக்கு மொத்தக் கடன் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில் ரூ.55,844 கோடி பொதுக்கடனை அரசு திரும்பச் செலுத்தும்.
2026 மார்ச் 31ம் தேதிப்படி தமிழ்நாடு அரசின் நிலுவையில் உள்ள கடன் ரூ.9.29 லட்சம் கோடியாக இருக்கும். எனினும், மாநில ஜி.டி.பி. மதிப்பில் இது 26.07% ஆகும். சீரிய நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை தக்கவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.