7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு
Mar 30, 2025, 10:36 IST1743311203973

7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நிர்வாக வசதி உள்ளிட்ட காரணங்களாக ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் கன்னியாகுமரி, அவினாசி உள்ளிட்ட 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், செங்கம், கன்னியாகுமரி, சேலம் மாவட்டம் சங்ககிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திருப்பூர் மாவட்டம் அவினாசி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.