குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் ஹாரன் பயன்படுத்த கூடாது - தமிழ்நாடு அரசு உத்தரவு!

 
assembly assembly

குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது. அமைதி மண்டலங்களில், இரவு நேரங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. இரவு நேரங்களில் ஒலியை ஏற்படுத்தும் கட்டுமான கருவிகளை இயக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 
மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆர்டிஓக்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒலி மாசு நிர்ணயம் செய்யப்பட அளவை விட அதிகமாக இருப்பதாக புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.