தமிழ்நாடு கேபினட்டில் திடீர் மாற்றம்... அமைச்சர்களின் துறைகள் பறிப்பு? - என்ன காரணம்?

 
ஸ்டாலின் கேபினட்

மத்திய அரசிலும் சரி பல்வேறு மாநில அரசுகளிலும் சரி ஒரே மாதிரியான கட்டமைப்பே பின்பற்றுகின்றன. நிர்வாக வசதிக்காக தனித்தனி இலாகாக்கள் அல்லது அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டு அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களோ, எம்எல்ஏக்களோ அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் கூட அமைச்சராக முடியும். ஆனால் 6 மாதத்தில் வெற்றிபெற்றாக வேண்டும். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் இலாகாக்களை ஒதுக்கிவிட்டு இலாகா இல்லாமலேயே ஆட்சி செய்யலாம். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் எந்த இலாகாவும் இல்லை. ஆனால் அவர் முதலமைச்சர்.

mk stalin ministry district wise minister plus and minus - முக ஸ்டாலின்  அமைச்சரவையில் மாவட்ட வாரியாக பிரதிநிதித்தும் சாதகமும் பாதகமும்

அதேபோல ஒவ்வொரு அமைச்சகத்தின் கீழும் பல்வேறு துறைகள் செயல்படும். உதாரணமாக பால்வள அமைச்சகத்தை எடுத்துக்கொண்டால் அதற்குக் கீழ் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை வளர்ச்சி துறை, ஆவின் நிர்வாக துறை ஆகிய துறைகள் வரும். இந்த துறைகள் அனைத்தையும் உள்ளடக்கியது தான் ஒரு அமைச்சகம். மாநிலங்களைப் பொறுத்தவரை துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் செயலர்களாக நியமிக்கப்படுவார்கள். மத்திய அரசில் இணை அமைச்சர்கள் இதர துறைகளைக் கவனித்துக்கொள்வார்கள். செயலர்களும் உண்டு.

அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அமைச்சரவை இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தொழில் துறை அமைச்சகத்தின் (தங்கம் தென்னரசு) கீழ் செயல்பட்ட சர்க்கரை ஆலைகள் துறை உழவர் நல துறை அமைச்சரான எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த விமான போக்குவரத்து  தொழில் துறை அமைச்சரிடமும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் இருந்த அயலக பணியாளர் கழகம் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.