குண்டேரிபள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு!

 
assembly

ஈரோடு மாவட்டம் குண்டேரிபள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரைவிட்டுள்ளது. 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரிக்கையில், இரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம். கொங்கர்பாளையம் கிராமம், குண்டேரிபள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடது கரை வாய்க்கால் புன்செய் பாசனத்திற்கு 22.03.2024 முதல் 04.05.2024 வரை மொத்தம் 44 நாட்கள் தொடரில் 34 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டும். 10 நாட்கள் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தம் செய்தும். மொத்தம் 70.502 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் ஈரோடு மாவட்டம், வட்டத்திலுள்ள வாணிப்புத்தூர். கொங்கர்பாளையம், அரக்கன்கோட்டை கோபிசெட்டிபாளையம் கவுண்டம்பாளையம், மற்றும் புஞ்சைத்துறையம்பாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள 2498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என குறிப்பிட்டுள்ளார்.