கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 
assembly

கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அமெரிக்காவில் 6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக வீராங்கனைகள், நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம்,  காசிமா உள்ளிட்டோர் கலந்துகொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். தங்கம் பதக்கங்களை குவித்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

இந்த நிலையில், கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்றதற்காக காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.