நேரு படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை!

 
RN Ravi

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள்  குழந்தைகள் தினமாக  கொண்டாடப்படுகிறது.இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.  இந்தியாவில் ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள். 

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், தா.மோ.அன்பரசன் மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.