மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

 
rn ravi

மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை. காந்தியை நான் பெரிதும் பதிக்கிறேன் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். 

1942க்கு பிறகு மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலனிக்கவில்லை என ஆளுநர் பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தேசப்பிதா மகாத்மா காந்தியை நான் அவமரியாதை செய்தேன் என்று கடந்த 3-4 நாட்களில் சில ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டு வருகின்றன. நான் உண்மைக்கு அப்பால் எதுவும் பேசவில்லை. நான் மகாத்மா காந்தியை மிகவும் மதிக்கிறேன், அவருடைய போதனைகள் என் வாழ்க்கையின் இலட்சியங்களாக இருந்தன. ஜனவரி 23, 2024 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாளில் நான் பேசியதைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் என் பேச்சை திரித்து வெளியிட்டு வருகின்றனர்.  

ravi

நமது தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை எனது உரையில் விரிவாகக கூற முயன்றேன். 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் வேகத்தையும் செயல்முறையையும் துரிதப்படுத்தியது பிப்ரவரி 1946 இல் ராயல் இந்தியன் கடற்படை மற்றும் விமானப்படையின் கிளர்ச்சிகள். இரண்டும் நேதாஜியால் ஈர்க்கப்பட்டவை என்று நான் ஒரு கருத்தை முன்வைக்க முயற்சித்தேன். இந்தக் கிளர்ச்சிகள் காரணமாக பிரிட்டிஷார் பீதியடைந்தனர், ஏனென்றால் அவர்கள் இந்தியாவில் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக சீருடையில் உள்ள இந்தியர்களை இனி நம்ப முடியாது என இந்தியாவை விட்டு வெளியேறுவதாகப் பகிரங்கமாக அறிவித்தனர். 


நேதாஜியின் ஆயுதப் புரட்சி மற்றும் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீதான அதன் ஆதிக்க விளைவே ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு விரைவில் வெறியேற்ற உதவியாக இருந்தது. நான் கூறியது முதன்மை ஆவணங்களின் அடிப்படையிலான உண்மைகள். மகாத்மா காந்தியின் போதனைகள் என் வாழ்வின் வழிகாட்டியாக இருந்தன. அவருக்கு நான் எந்த அவமரியாதையையும் சொல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.