தேசிய பத்திரிகை தினம் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

 
rn ravi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய பத்திரிகை தினத்தையொட்டி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 16ம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய பத்திரிகை தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் ஊடக துறையினர் மற்றும் பத்திரிகை துறையினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய பத்திரிகை தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், #தேசியபத்திரிகைதினத்தில் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள். வலுவான, வளமான குடிமக்களை மையமாகக் கொண்ட ஜனநாயகத்தை கட்டியெழுப்ப சுதந்திரமான மற்றும் நியாயமான ஊடகம் முக்கியமானது. அந்த பெரும் எதிர்பார்ப்புடன் ஊடகவியலாளர்களை தேசம் எதிர்நோக்குகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.