பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
Oct 10, 2020, 22:07 IST1602347830000
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிக்கல்வித்துறை ஆணையராக இருந்த சிஜி தாமஸ் வைத்தியன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்படுகிறார். என். வெங்கடேஷ் பள்ளிக் கல்வித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில், செயல் அலுவலராக கிராந்தி குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையராக சரவணனும், டாஸ்மாக் எம்.டி.யாக மோகன் ஐஏஎஸ்சும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராக கிர்லோஸ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.