விளையாட்டு துறையில் மிகப்பெரிய ஆராய்ச்சி தேவை - ஆளுநர் ஆர்.என்.ரவி

 
rn ravi

தனிநபர்களின் முழுமையான வளர்ச்சி, நமது தேசத்தை உலகின் விளையாட்டு வல்லரசாக மாற்றுகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். 

இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் 2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுகளில் மறுமலர்ச்சிக்கான சர்வதேச மாநாட்டில் ஆளுநர் ரவி ஆற்றிய தனது உரையில், வளர்ந்து வரும் விளையாட்டு கலாசாரம், அடிமட்டத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பின் மிகப்பெரிய விரிவாக்கம், #கேலோஇந்தியா மற்றும் #ஃபிட்இந்தியா போன்ற முன்முயற்சிகள் எவ்வாறு பங்களிப்பை வழங்குகின்றன என்பதை விரிவாக விளக்கினார்.


தனிநபர்களின் முழுமையான வளர்ச்சி, நமது தேசத்தை உலகின் விளையாட்டு வல்லரசாக மாற்றுகிறது. விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய ஆராய்ச்சி தேவை என்று வலியுறுத்தினார்.