முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா காலமானார்!

 
tn

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார். அவருக்கு வயது 76.

ttn

முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் சேடப்பட்டி முத்தையா  1991 முதல் 1996 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர். சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் "சேடபட்டியார்" என்று அழைக்கப்பட்டார்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு  நெருக்கமாக இருந்த இவர் அதிமுக சார்பில் நாடாளுமன்றத்திற்கு பெரியகுளம் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையேற்ற நடுவண் அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியுள்ளார். இதையடுத்து அதிமுகவிலிருந்து விலகி 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

 

இந்நிலையில்  உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.