ஜாபர் சாதிக்கிற்கு தாம் கொடுத்தது விருது அல்ல - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்!

 
Shankar Jiwal

ஜாபர் சாதிக்கிற்கு தாம் கொடுத்தது விருது அல்ல, அது வெறும் பரிசுப்பொருள் மட்டுமே என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார். 

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: போதைப் பொருள் தடுப்பில் இந்திய அளவில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளது. போதைப் பொருள் விற்பனை செய்தவர்களின் ₹18 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளோம் என கூறினார். அப்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக்குடன் புகைப்படம் வெளியானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

jaffer

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், ஜாபர் சாதிக்கிற்கு தாம் கொடுத்தது விருது அல்ல, அது வெறும் பரிசுப்பொருள் மட்டுமே. சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது 10 CCTV கேமராக்களை ஸ்பான்சர் செய்தார் ஜாபர் சாதிக். போதைப்பொருள் வழக்கில் குற்றவாளி என தெரிந்ததும், அவர் வழங்கிய சிசிடிவி கேமராக்களை நிறுத்தி விட்டோம். ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ளன என கூறினார்.