BREAKING தமிழ்நாடு டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாடு சட்டம், ஓழுங்கு டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு சட்டம், ஓழுங்கு பொறுப்பி டிஜிபி வெங்கட்ராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு சட்டம், ஓழுங்கு டிஜிபியாக சந்திப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக சஞ்சய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் மதுரை காவல் ஆணையர் லோகநாதன் மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக அபிஷேக் தீக்சித் மேற்கு மண்டல ஐஜி ரம்யாபாரதி நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை உயர் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்ட ஒழுங்கு டிஜிபியாக சந்திப்பாய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

