காந்தி நினைவு நாள் - தமிழக காங்கிரஸ் சார்பில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

 
congress

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் 77-வது நினைவு தினத்தை முன்னிட்டு,  சென்னை சத்தியமூர்த்தி பவனில், அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவப் படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ் அழகிரி அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தபட்டது மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.


இதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் அவர்களின் வழித் தோன்றல்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.   இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்கள், முன்னணி தலைவர்கள் மாநில நிர்வாகிகள் முன்னணி அமைப்புகள் துறைகள் மற்றும் பிரிவுகள் தலைவர்கள் மாவட்ட தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.