மோடி ஆட்சியில் 82,514 மாணவர்கள் தற்கொலை; கருப்பு பலூன்களை பறக்கவிடுவோம்- காங்கிரஸ்

 
m

நாளை சென்னை வரும்‌ பிரதமர்‌ மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்‌ வருகை கருப்பு பலூன்களை பறக்க விடுவோம்‌. இளைஞர்கள்‌ அனைவரும்‌ திரண்டு வாருங்கள்‌ என்று என தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவா் எம்.பி. ரஞ்சன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவா் எம்.பி. ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறந்த கல்வி வசதி, கல்வி நிறுவனங்களில்‌ பாகுபாடு அற்ற நிலை, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என இந்திய இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்து கடந்த 2014 ஆம்‌ ஆண்டு பிரதமர்‌ மோடி ஆட்சிக்கு வந்தார்‌.  இந்த பிரச்சினை நம்மால்‌ நாடு முழுவதும்‌ கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த 2019 முதல்‌ 2021 வரை மட்டும்‌ இந்தியாவில்‌ 35 ஆயிரம்‌ மாணவர்கள்‌ தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்‌.  நரேந்திர மோடி கடந்த 2014 ஆம்‌ ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2021 ஆம்‌. ஆண்டு வரை 82 ஆயிரத்து 514 மாணவர்கள்‌ தற்கொலை செய்து கொண்டார்கள்‌. 2022 முதல்‌ 2023 வரையிலான காலகட்டத்தில்‌ தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள்‌ எண்ணிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம்‌ வெளியிட விடாமல்‌ மோடி அரசு தடை செய்துள்ளது.  நரேந்திர மோடி பிரதமர்‌ ஆனதிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை அதிகரித்துக்‌ கொண்டே போகிறது. 

2022 -2023 ஆண்டுகளில்‌ மட்டும்‌ ஒரு லட்சத்துக்கும்‌ அதிகமான மாணவர்கள்‌ தற்கொலை செய்து இருப்பார்கள்‌ என்று இவ்வளவு மாணவர்கள்‌ தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம்‌ என்ன?' அவர்களது சமூகப்‌ பொருளாதார வாழ்க்கை நிலை என்ன? இரண்டு முக்கிய விஷயங்களை நாம்‌ புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்‌.  உண்மையை சொல்லப்போனால்‌ தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில்‌ 95 சதவிகிதம்‌ பேர்‌ எஸ்‌.சி., எஸ்‌.டி, சிறுபான்மை மற்றும்‌ பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்‌.  இந்தியாவில்‌ இதுவரை தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின்‌ சமூக சாதிய தரவுகளை வெளியிடுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்‌. 2014 முதல்‌ 2021 வரை ஐஐடி, ஐ.ஐ.எம்‌ மற்றும்‌ மத்திய பல்கலைக்கழகங்களில்‌ தற்கொலை செய்து கொண்ட 212 பேரில்‌, 24 இந்த மாணவர்கள்‌ எஸ்‌.சி சமூகத்தை சார்ந்தவர்கள்‌. 3 பேர்‌ எஸ்‌.சி. சமூகத்தை சார்ந்தவர்கள்‌.41 பேர்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள்‌. சாதி அடிப்படையிலான பாகுபாடு, கொடுமை மற்றும்‌ 45 ஆண்டு வரலாற்றில்‌ இல்லாத அளவுக்கு நிலவும்‌ வேலையில்லா திண்டாட்டம்‌ காரணமாகவே இந்த தற்கொலைகள்‌ நிகழ்ந்துள்ளன.  பிரதமர்‌ மோடியின்‌ பொய்யான வாக்குறுதியே மாணவர்கள்‌ தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. 


82 ஆயிரத்து 514 மாணவர்கள்‌ தற்கொலை செய்து கொண்டதற்கு மோடியே பொறுப்பு.  எஸ்‌.சி., எஸ்‌.டி, மாணவர்களுக்கு எதிராக நடக்கும்‌ வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட ரோஹித்‌ வெமுலா சட்டத்தை உடனே அமல்‌ படுத்த வேண்டும்‌.  சமீபத்தில்‌ நாடாளுமன்றத்தில்‌ 4 மாணவர்கள்‌ தாக்குதல்‌ நடத்திய சம்பவம்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு வேலையில்லா திண்டாட்டமே காரணம்‌. இத்தகைய வன்முறை போராட்டத்தை நாம்‌ ஒருபோதும்‌ ஆதரிப்பதில்லை. இருந்தாலும்‌ இது போனற நிகழ்வுகள்‌ மூலம்‌ பிரதமர்‌ நரேந்திர மோடி அரசு மீது இளைஞர்கள்‌. அதிருப்தியில்‌ இருக்கிறார்கள்‌ என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  2024 ஆம்‌ ஆண்டு மக்களவைத்‌ தேர்தலில்‌ மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசே தூக்கி எறிய இளைஞர்கள்‌ முன்‌ வர வேண்டும்‌. அதற்கு முன்னோட்டமாக நாளை சென்னை வரும்‌ பிரதமர்‌ மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்‌ வருகை கருப்பு பலூன்களை பறக்க விடுவோம்‌. இளைஞர்கள்‌ அனைவரும்‌ திரண்டு வாருங்கள்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.