வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!
Sep 23, 2026, 15:27 IST1790157478730
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிந்தார் முதல்வர் விஜய்.
உடல்நலக்குறைவு காரணமாக எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். சுவாசத்தொற்று, மூச்சுத்திணறலால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையின் எம்எல்ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

