சாதி கலவரம், மத கலவரத்தை உண்டாக்கி திமுக ஆட்சியை அகற்ற சதி - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 
cm stalin

தமிழகத்தில் சாதி கலவரம் மற்றும் மதக்கலவரம் உள்ளிட்டவற்றை உண்டாக்கி திமுக அரசை அகற்ற சிலர் சதி செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. 6.5 அடி உயர் பீடத்தில் 8 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

mk stalin

சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சாதி கலவரம் , மத கலவரத்தை தூண்டலாமா என சிலர் முயற்சி செய்து வருகின்றனர். நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்.  மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தலாமா என சிலர் திட்டமிட்டு காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை விளம்பரப்படுத்த அவர்கள் நம் மீது விமர்சனத்தை வைக்கின்றனர். இவ்வாறு கூறினார்.