டெல்லி சென்றடைந்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
stalin

ஜி20 மாநாட்டையொட்டி குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். 
 
இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறாது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது.  இந்த சூழலில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  விருந்து அளிக்கிறார்.  இதில்  பங்கேற்பதற்காக அனைத்து முக்கிய தலைவர்களும் குடியரசு தலைவர் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.  குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.  


இந்த நிலையில், குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். ஜி20 மாநாட்டை முன்னிட்டு இன்று மாலை
குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.