சிறார்களுக்கு தடுப்பூசி : தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

 
மாணவர்களுக்கு தடுப்பூசி

சிறார்களுக்கு 73% தடுப்பூசி செலுத்தி  இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கவும் தடுப்பூசி பேராயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அந்தவகையில் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே முதலில் தடுபூசி செலுத்தப்பட்டு வந்தது. அதற்குள்ளாக கொரோனா மூன்றாவது அலை மற்றும் ஒமைரான் பரவல்  இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியது.

கொரோனா தடுப்பூசி

இதனையடுத்து 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி ஜனவரி 3 முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை 33 லட்சத்து 22 ஆயிரம் சிறார்களுக்கு  தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 26 லட்சம் மாணவ - மாணவிகளுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி  செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மா.சுப்பிரமணியன்

இந்த மாத இறுதிக்குள் சிறார்களுக்கு தடுப்பூசி  செலுத்தி முடிக்க  சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் 73% சிறார்களுக்கு தடுப்பூசி செலுப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும்,சிறார் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.