முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவையில் வரும் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார். வருகிற 14ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் நிலையில், 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை மார்ச் 15ம் தேதி் வேளாண் துறை அமைச்சர் எம் .ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழக அமைச்சரவை கூட்டத்தில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கும் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தி திணிப்பு, கல்வி நிதி விவகாரம் தொடர்பாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய, மாநில அரசுகளின் உறவு தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.