பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மகளிர் நலத்திட்டங்கள்!

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு, விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் மகளிருக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதாவது, சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடிக்கு மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.
மகளிர் விடியல் பயண திட்டத்திற்காக ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 இடங்களில், 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் ரூ.77 கோடி மதிப்பில் தோழி விடுதிகள் அமைக்கப்படும். மேலும் 10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ரூ.37,000 கோடி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.13, 807 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு, விரைவில் வழங்கப்படும் என கூறினார்.