வருகிற 12ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை - 19ம் தேதி பட்ஜெட் தாக்கல்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 12ம் தேதி தொடங்கவுள்ளதாகவும், 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 12.2.2024 ஆம் நாள். திங்கட்கிழமை. காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19 ஆம் நாள் திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்படும். மேலும், 2024-2025-4 ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள். 20 ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்றும், 2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி), 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 21 ஆம் நாள், புதன்கிழமை அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும்.