காஷ்மீரில் தாமரைக் கொடி கட்டிப் பறக்கும் காலம் வெகு தொலைவிலில்லை- பாஜக
இந்திய இறையாண்மையை காக்க, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பாஜக தலைமையிலான அரசிற்கு, தங்கள் மனதில் "சிறப்பு அந்தஸ்தை" ஜம்மு காஷ்மீர் மக்கள் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய இறையாண்மையை காக்க, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பாஜக தலைமையிலான அரசிற்கு, தங்கள் மனதில் "சிறப்பு அந்தஸ்தை" வழங்கிய ஜம்மு காஷ்மீர் மக்கள்! ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த வேளையில், சுமார் 25.79% வாக்குகளுடன் அம்மாநில மக்களின் நம்பிக்கையைப் பெற்று, வாக்கு வங்கியில் முன்னிலை வகிக்கிறது பாஜக.
கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெரும் சட்டமன்ற தேர்தலில், ஒரு கட்சி வாக்கு வங்கியில் தனிப் பெரும்பான்மை வகிப்பது என்பது மாபெரும் சாதனை. இந்த சாதனையானது நமது பாரதப்பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் கொண்டு வரப்பட்ட பல நலத்திட்டங்களுக்கு மக்கள் அளித்த அன்பு பரிசாகும். எனவே, பனிமழை பொழியும் ஜம்மு காஷ்மீரின் அழகிய நகரங்களில், நமது பாஜக -வின் தாமரைக் கொடி கட்டிப் பறக்கும் காலம் வெகு தொலைவிலில்லை என்பதை அம்மாநில மக்கள் அழுத்தமாக எடுத்துரைத்துள்ள இக்கணத்தைக் கொண்டாடி மகிழ்வோம்! வாழ்க பாரதம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.