அமைச்சர் உதயநிதியை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

 
bjp

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சனாதனதர்மத்தை பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாஜகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி, ராணிப்பேட்டை என பல்வேறு மாவட்டங்களிலும் கண்டனம் ஆர்பாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்து சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி_ஸ்டாலினை கண்டித்தும், அதனை கண்டிக்காத  இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து பதவி விலகக் கோரியும், கன்யாகுமரி மாவட்ட கட்சியின் சார்பாக இந்துஅறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் முன்பு  மாபெரும்  முற்றுகை போராட்டம்  நடைபெற்றது.  
இதேபோல் ராணிப்பேட்டை, ராஜேஸ்வரி தியேட்டர் அருகில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை கைது செய்தது  காவல்துறை. மாவட்ட தலைவர் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கைதானார்கள். இதேபோல் திருச்சியிலும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.