என் வழி தனி வழி... இன்னும் 6 மாதத்தில் பலர் போகலாம் - அண்ணாமலை அதிரடி

 
Annamalai

தமிழக பாஜகவில் இருந்து இன்னும் 6 மாதத்தில் பலர் செல்வார்கள் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  அரசியலில் ஒரு கட்சியில் இருந்து 4 பேர் போவதும், 40 பேர் வருவதும் சகஜமானது தான். எங்களை வேறு எந்த கட்சியோடும் ஒப்பிடாதீர்கள். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். பா.ஜனதாவின் காலம் வந்துவிட்டது. எங்களுக்கு ஆதரவாக மக்கள் மாறி இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். நான் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுபவன் அல்ல. இப்படி பேசி விட்டார்கள் என்பதற்காக அவதூறு வழக்கு தொடரப்போவதுமில்லை. அப்படி அவதூறு வழக்கு போடுவதாக இருந்தால் தினமும் போட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும். அதை நான் விரும்புவதில்லை. மக்கள் மன்றத்தில் விட்டு விடுவோம். மக்கள் முடிவு செய்யட்டும். யார் தலைவர் என்று. இன்றைக்கு தி.மு.க.வின் அமைச்சர்களில் பாதிபேர் அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்கள் தான்.  

Annamalai

இப்போதே ஷாக் ஆகாதீர்கள். இன்னும் ஆறு மாதத்தில் பலர் போகலாம், மேலும் பலர் வெளியில் இருந்து வரலாம்.  நான் இப்படித்தான் இருப்பேன். எதிலும் சமரசமாகமாட்டேன். நான் தலைவராக இருக்கும் வரை இந்த கட்சி இப்படித்தான் இருக்கும், கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சில மாற்றங்களை செய்துதான் ஆக வேண்டும். அப்படியானால் தான் நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியும்.  என் வழி தனி வழி. தலைவர் என்றால் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். அதனால் எது வந்தாலும் சந்திக்க வேண்டும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.