நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் - அண்ணாமலை

 
Annamalai

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டெப்பாசிட் வாங்குவதே கடினம் தான் என 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு காரணம், உட்கட்சி பிரச்சனை மற்றும் கூட்டணிகளை ஒருங்கிணைக்காததே காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இதேபோல், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையில் பாஜக தலையிட்டு வருவதாகவும் அவர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், திருமாவளவனின்  இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். 

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- விசிகவின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது. கூட்டணிக் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக திருமாவளவன் சொல்வது தவறானது. பிற கட்சி விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிடாது. திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் முடிவு செய்துவிட்டார். அவர் தைரியமாக வெளியே வரட்டும். விசிக தலைவர் மாறி மாறி பேசி வருகிறார். 2024 மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான். யார் பாஜகவிற்கு வந்தாலும் அரவணைப்பது எனது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.