அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் மோதல் இல்லை - அண்ணாமலை பேட்டி

 
Annamalai

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் எந்த சங்கடமும், வருத்தமும், உரசலும், மோதலும் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 
 
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது பெயருக்கு பின்னால் எம்.எல்.ஏ, எம்.பி. என்று போட நான் அரசியலுக்கு வரவில்லை. கட்சி வளர வேண்டும் என்பது தான் எனது இலக்கு.  நான் பேசிய எனது கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை. யாரும் போகாத பாதையில் பா.ஜ.க. பயணிக்கிறது. எங்களது பாதை தனித்தன்மையான பாதை. நான் இப்படி தான் இருப்பேன். நான் இருக்கும் வரை கட்சி இப்படி தான் இருக்கும். பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிடவில்லை. எல்லோருக்கும் தனித்தன்மை இருக்கிறது. அட்ஜெஸ்ட் செய்து நான் அரசியல் செய்ய மாட்டேன். 

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் எந்த சங்கடமும், வருத்தமும் இல்லை. உரசலும், மோதலும் இல்லை. நாங்கள் யாருக்கும் சாமரம் வீச மாட்டோம். ஆயிரக்கணக்கானோர் தினமும் பா.ஜ.க.வில் இணைகிறார்கள். ஒரு கட்சியில் பலர் இணைவதும், விலகுவதும் சகஜம். எங்கள் கட்சிக்கு ஆயிரம் பேர் வந்தால், நூறு பேர் போகிறார்கள். தி.மு.க. அமைச்சர்கள் பலர் அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்கள்தான். ஒரு எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் சேரலாம். இடைத்தேர்தல் வரும் என்று கருதி அதனை விரும்பவில்லை. தி.மு.க. அமைச்சர்கள் தவறாக பேசுவது புதிதல்ல. பொன்முடி தொடர்ந்து அதைத் தான் பேசி வருகிறார்.