அடுத்தடுத்து அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள் - அண்ணாமலை ஷாக்!

 
bjp and eps

தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகிய ஐ.டி. விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன், தமிழக பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ( IT Wing) தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.  இதேபோல் தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப செயலாளர் திலீப் கண்ணன், பாஜகவிலிருந்து தற்போது விலகுவதாக அறிவித்து உள்ளார். நேற்று பாஜகவில் இருந்து விலகிய தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் அதிமுகவில் இணைந்தார். அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் விஜய் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர். பாஜகவில் இருந்து ராஜினாமா செய்த அனைவரும் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் விலகுவது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி அதிமுகவில் இணைந்தார். நிர்மல் குமார் தலைமையில், ஜோதி உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.