தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் நிறைவு!
தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் நிறைவடைந்தது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என கூறப்பட்டது. இதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தார். சபாநாயகர் அப்பாவு பொன்னாடை போர்த்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றார். சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி
கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். தேசிய கீதம் பாடவில்லை என கூறி அவர் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். இதனையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் நிறைவடைந்தது. அலுவல் ஆய்வுக்குழு இன்று மாலை கூடி, எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.