மும்மொழிக் கொள்கை விவகாரம் - சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

 
assembly

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி ஒதுக்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில்  இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ எழிலன் பேசியதாவது, மத்திய அரசால், இந்தி பெயரில் தான் திட்டங்கள்  செயல்படுத்தப்படுகிறது. இருமொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளோம். ஒரு 'ரூ' போட்டதற்கு ருத்ர தாண்டவம் ஆடுகின்றனர். இந்தியை பழக்கப்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சி  செய்கிறது என கூறினார். 

இதனை தொடர்ந்து பேசிய வேல்முருகன், இந்தியை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார். இருமொழிக் கொள்கையால் கல்வித்தரம் உயர்ந்துள்ளது , உலக நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டுள்ளோம் என ஈஸ்வரன் எம்.எல்.ஏ பேசினார். எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் இந்தியை அனுமதிக்க மாட்டோம் என செல்வப் பெருந்தகை கூறினார்.