"அன்பில் மகேஷ் தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் நிரூபித்து வெளியே வரட்டும்" - தமிழிசை

 
"அன்பில் மகேஷ் தவறு செய்யவில்லை என்றால், நீதிமன்றத்தில் நிரூபித்து வெளியே வரட்டும்" - தமிழிசை 

பா.ஜ.கவை எதிர்க்கிறோம் என்று சொல்லி பள்ளிக்குழந்தைகளுக்கு அநீதி இழைத்தது இந்த தி.மு.க..! மும்மொழியை எதிர்க்கிறோம் என ஊழல் தான் செய்துள்ளார்கள்.. யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டனைக்குறியவர்கள் என அன்பில் மகேஷ் கைது குறித்து தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை, "எஸ்ஐஆருக்கு எதிராக தவறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எஸ்ஐஆருக்குப் பிறகுதான் பலரும் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எஸ்ஐஆரை ஆதரிப்பார்கள். வெற்றி பெறவில்லை என்றால் எதிர்ப்பார்கள். பிரதமர் குறித்து மல்​லிகார்​ஜுன கார்கே தரக்​குறைவாகப் பேசி​யுள்​ளார். பிரதமர் மோடி​யின் தொடர் வெற்​றிகளுக்கு, காங்​கிரஸாரின் இதுபோன்ற விமர்​சனங்​களும் ஒரு காரணம். காங்​கிரஸ் தலை​வர்​களுக்கு, தங்​கள் கட்​சித் தொண்​டர்​கள் யார் என்​ப​துகூடத் தெரிய​வில்லை. நூற்​றாண்டு கால ஆர்​எஸ்எஸ் சித்​தாந்​தத்தை, நீங்​கள் மட்​டுமல்ல, யாராலும் அழிக்க முடி​யாது. 

யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது உணர்த்துகிறது.  தவறு செய்யவில்லை என்றால், நீதிமன்றத்தில் தங்களை நிரபராதிகள் என நிரூபித்து வெளியே வரட்டும். பா.ஜ.கவை எதிர்க்கிறோம் என்று சொல்லி பள்ளிக்குழந்தைகளுக்கு அநீதி இழைத்தது இந்த தி.மு.க..! மும்மொழியை எதிர்க்கிறோம் என ஊழல் தான் செய்துள்ளார்கள்.. யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டனைக்குறியவர்கள்" என்றார்.