“ஐயோ... இன்னும் எத்தனை கொடுமைகளை பார்க்க வேண்டியிருக்கிறது”- தமிழிசை

 
விஜய்க்கு இது கடைசி படமா? தண்ணீரில்தான் எழுத வேண்டும்' - தமிழிசை

தமிழகத்தில் பெண்ணினம் இன்னும் எத்தனை கொடுமைகளை அனுபவிக்க வேண்டி இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ச்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடலை கூறு கூறாக வெட்டிப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியின் சடலத்தை மீட்ட குளத்தூர் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸார் சிறுமியின் உடலை கூராய்வுக்கு அனுப்ப முயன்றபோது பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போலீசுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன்- தமிழிசை

இந்நிலையில் தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், “தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இரவு நேரம் இயற்கை உபாதை கழிக்க சென்ற 17 வயது சிறுமியை இன்று உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கிறார்.. ஐயோ.. இன்னும் எத்தனை கொடுமைகளை... பார்க்க வேண்டியிருக்கிறது.. நேற்று மதுராந்தகம் அருகில் 14 வயது சிறுமி. பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் நடந்து அவளே காலையில் காவல் நிலையம் வரவேண்டிய அவல நிலையில் தமிழகம் இருக்கிறது...... தமிழகத்தில் பெண்ணினம் இன்னும் எத்தனை கொடுமைகளை அனுபவிக்க வேண்டி இருக்கிறது... குழந்தைத்தனம் மாறாத  சிறுமிகளை பாலியல் வெறிக்கும் போதை வெறிக்கும் தமிழகம் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது... திமுக மாடல் அரசு குற்றவாளிகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.. வேதனை....” எனக் குறிப்பிட்டுள்ளார்.